fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல்வர் வேட்பாளரை அறிவித்த அதிமுக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. மீண்டும் ஆட்சியை பிடிப்போம்

eps-ops-admk

Tamil Nadu | தமிழ் நாடு

முதல்வர் வேட்பாளரை அறிவித்த அதிமுக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. மீண்டும் ஆட்சியை பிடிப்போம்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கடந்த சில நாட்களாக முடிவுக்கு வராமல் இருந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் சூழ்நிலையில் இன்று தேர்வு செய்து அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி போட்டியிடுவார் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனால் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளன.

பெரும் குழப்பத்தில் இருந்த அதிமுக தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தேர்தலுக்கான பணிகளை விரைவில் தொடங்கி வெற்றி காண்போம் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார், இந்த குழுவின் அறிவுறுத்தலின் பெயரில் கட்சி இயங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதினோரு பேரும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தேர்வு செய்து, தற்போது ஒரு குழுவாக செய்யப்படுகின்றன.

இதனால் அம்மாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ், சசிகலாவால் கைவிடப்பட்ட இபிஎஸ்சும் ஒன்று கூடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top