Connect with us
Cinemapettai

Cinemapettai

eps-ops-1

Tamil Nadu | தமிழ் நாடு

அதிமுக-வில் அம்மாவுக்கு அடுத்தப்படியாக முதல்வர் வேட்பாளார் இவர் தான் .! கட்சியில் பெருகும் ஆதரவு

நேற்றைய தினம் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது, யார் முதல்வர் வேட்பாளர் என்பது போன்று விவாதம் நடைப்பெற்றது.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், மூத்த தலைவர்களுடன் ஆலோசனைகளும் நடைபெற்றது. அந்த சந்திப்பின் முடிவில் ஓபிஎஸ்-க்கு மிக மிக குறைந்த அளவிலான ஆதரவு கிடைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிகளில் ஆதரவு குவிந்து வருவதாக தொண்டர்கள் குதுகளத்தில் உள்ளனர்.

அமைச்சர் தங்கமணி, திரு. சீனிவாசன், திரு.கடம்பூர் ராஜு, திருமதி.சரோஜா போன்ற மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டி, இ.பி.எஸ்ஸை ஆதரித்தனர்.

செயலாளர்கள் திரு.அஷோகன் & திரு.ஷெட் கான் (முன்னதாக OPS க்கு ஆதரவாக இருந்தவர்) ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அமைச்சர்கள், இபிஎஸ்ஸைப் பொருத்தவரை, அவர் எப்போதுமே அம்மாவுக்கு (செல்வி. ஜெயலலிதா) மிகவும் பிடித்த ஒருவராகவே இருந்தார் என கூறியுள்ளனர்.

கடந்த முறை பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்த உறுப்பினர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி திறமையைக் கண்டு அவர் பக்கம் தாவி உள்ளனர்.

இதனால் பன்னீர்செல்வத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதாவது அவர் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதுவும் செய்யவில்லை தன்னுடைய குடும்பத்தை பலப்படுத்துவதற்கான குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான இறுதி முடிவு வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
To Top