Politics | அரசியல்
விஜய் அரசியல் பேச்சு! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதில்
ரஜினி ஒரு பக்கம் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறிவிட்டு படங்களில் நடித்து முடித்த பின் கட்சியை பற்றிய அறிவிப்பை அறிவிப்பார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அதேநேரம் சத்தமில்லாமல் விஜய் தன் பங்குக்கு அரசியல் வசனங்களை படத்திலும் மேடைகளிலும் பேசி எதிர்பார்ப்பை உருவாக்குகிறார்.

sarkar vijay
சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சுகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் போலவே பேசிவிட்டு சென்று விட்டார். இதற்கு எதிர்ப்பு ஆதரவு என அனைத்தும் வருகிறது.
பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், அவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது போலருக்கு. முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கி வரட்டும் பின்னர் பார்க்கலாம் என்று கூறினார்.
