எந்திரனை தூக்கிசாப்பிட்டு முதல் இடத்திற்கு முந்திகொண்டிருக்கும் மெர்சல்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

எந்திரனை தூக்கிசாப்பிட்டு முதல் இடத்திற்கு முந்திகொண்டிருக்கும் மெர்சல்.!

News | செய்திகள்

எந்திரனை தூக்கிசாப்பிட்டு முதல் இடத்திற்கு முந்திகொண்டிருக்கும் மெர்சல்.!

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் – மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

mersal

மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது.

நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தில் முதன் முதலாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்த படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தின் வசூலை சில வருடங்களாக வேறு எந்தப் படமும் முறியடிக்காமல் இருந்தது.

mersal

ஆனால், இந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் ‘எந்திரன்’ வசூலை முறியடித்தது. இருந்தாலும் ‘பாகுபலி 2’ சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ‘மெர்சல்’ படம் அந்த சாதனையைக் கடந்துவிட்டது.

இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘பாகுபலி 2’ படம் சுமார் 120 கோடி தமிழ்நாட்டு வசூலுடன் முதலிடத்தில் உள்ளது.

‘எந்திரன்’ படத்தின் தமிழ்நாட்டு வசூலான 108 கோடியை முறியடித்துள்ள ‘மெர்சல்’ படம் தன்னுடைய மொத்த வசூல் முடிவில் ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mersal vijay

mersal vijay

‘மெர்சல்’ படம் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று வெளியாகும் படங்களும் அதற்குப் போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இன்னும் ஒரு வாரம் ஓடினால் கூட ‘மெர்சல்’ தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top