சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஒரு காரில் குண்டு வெடிப்பது போல் ஒரு காட்சியை படமாக்கியுள்ளார்.

இதற்காக ஒரிஜினல் குண்டையே பயன்படுத்தி வெடிக்க வைக்க, அந்த இடமே புகை மூட்டத்தில் சூழ்ந்தது, ஆனால், அந்த காட்சி மிகவும் ரியலாக வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால், இந்த சத்தத்தால் அருகில் இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.