ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.o’ திரைப்படம் ‘மேக் இன் இந்தியா’ திரைப்படமாக தயாராகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’ரோபோ’. அப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அதன் அடுத்த பாகமான ‘2.0’வை இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். இந்திய அளவில் அதிக பொருட்செலவில் படம் தயாராகி வருகிறது. அதன் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. ’2.0’வில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் ‘மேக் இன் இந்தியா’ திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மொழிகளில் ரூ.350 கோடி செலவில் தயாராகி வருகிறது.

Make In India_2Point0இப்படம் முற்றிலும் 3டி தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ’2.0’ படப்பிடிப்பில் ரஜினி இருந்த போது, அவருடன் பிரதமர் மோடி பேசியதாகவும், அப்போது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை விளம்பரப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் ‘2.0’ திரைப்படம் ‘மேக் இன் இந்தியா’ என்று குறிப்பிடப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.