Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல தடைகளை மீறி எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கெளதம் மேனன்
கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா நிறைவடைந்து தணிக்கை செய்யப்பட்டு நீண்ட காலமாக வெளியீட்டிற்காக காத்திருந்தது. அதே நேரத்தில் சியான் விக்ரம் நடித்த திரைப்படமான துருவ நட்சத்திரம் இன்னும் சில பகுதிகளை படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது என அறிவித்தனர் படக்குழு.
ரம்யா கிருஷ்ணன் நடித்த தனது முதல் வலைத் தொடரான குயின் படத்தையும் இயக்குனர் கௌதம் மேனன் முடித்துள்ளார். இப்போது கௌதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டாவின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர்களின் சந்திப்பின் போது, தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டாவை செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போது இதனைக் கேட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
