Tamil Cinema News | சினிமா செய்திகள்
ENPT படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்.. போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தார்! இம்முறை தோட்டா கட்டாயம் பாயும்
Published on
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மறுவார்த்தை , விசிறி என தர்புக சிவா இசையில் பாடல்கள் ஹிட் வகையறா (அதுவும் பல வருடங்களுக்கு முன்பு ). எனினும் பண பிரச்சனை விவகாரம் தொடங்கி பல தடைகள். அதனை தகர்த்து படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என பல குழப்பங்கள், சர்ச்சைகள் தான் இப்படத்தினை பற்றி. இதுவரை அதிக ரிலீஸ் தேதி மாறிய படமும் இதுவாக தான் இருக்கும்.
இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் 29 ரிலீசாகும் என புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனரின் நெருங்கிய நண்பர் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் – ஐசரி கணேஷ் இப்படத்தினை வாங்கிவிட்டார்.

enpt
எனவே இம்முறை கட்டாயம் இப்படம் ரிலீஸ் பார்க்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது கோலிவுட்டில்.
