30 வருடமாக படுத்த படுக்கையாக இருந்த நடிகர்.. பாரதிராஜாவின் கனவு ஹீரோ உயிரிழந்த சோகம்

Ennuyir Thozhan Movie Hero Babu: நடிகர்கள் பலர் பத்து, இருபது படங்களுக்கு மேல் நடித்து வாங்க வேண்டிய பெயரை ஒரு சிலர் ஒரே படத்தில் நடித்து வாங்கி விடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் படங்களை நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களால் எப்போதுமே நினைவில் வைத்து கொள்ளப்படுவார்கள். அப்படி ஒரு ஹீரோ தான் இன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா கோலிவுட் சினிமாவிற்கு பல திறமையான நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் அறிமுகப்படுத்தியவர்களில் யாருமே சோடை போனதில்லை. அப்படி பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் பாபு. முதல் படத்திலேயே ஆடியன்ஸ்களின் கவனத்தை பெற்றார்.

Also Read:சங்கீத ஜாதி முல்லை பாடல் ஹீரோவா இது?. பாரதிராஜாவால் சினிமாவை வெறுத்த கண்ணனின் தற்போதைய புகைப்படம்

படம் ரிலீஸ் ஆகி அடுத்த வருடத்திலேயே தொடர்ந்து தாயம்மா, பெரும்புள்ளி போன்ற படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பொண்ணுக்கு சேதி வந்தாச்சு என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது தான் யாருமே எதிர்பார்க்காத சோக சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஒரு சீனில் டூப் இல்லாமல் இவரே நடித்தார்.

அது அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த இவரின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது. அதிலிருந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். மருத்துவமனையிலும் இடுப்பு எலும்பு முறிவை குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதன்பின்னர் வீட்டிலிருந்தே வெளியில் செல்லாமல் இவருடைய வாழ்க்கை அப்படியே முடங்கி விட்டது. பாரதிராஜா உட்பட சில சினிமா பிரபலங்கள் இவருக்கு பொருளாதார உதவிகள் செய்தார்கள்.

                                                                     என் உயிர் தோழன் பட ஹீரோ பாபு

Ennuyir Thozhan movie hero Babu
babu

பின்னர் 1997இல் பிரகாஷ்ராஜின் படம் ஒன்றிற்கு வசனம் எழுதினார். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதோடு பாபுவின் சினிமா வாழ்க்கை மற்றும் கனவு மொத்தமாய் முடிந்து விட்டது. வீட்டில் அவரை ஒரு உதவியாளர் தான் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபு இன்று உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பாபுவின் கடைசி நாட்கள் ரொம்பவும் கொடுமையாக தான் இருந்திருக்கிறது. படுத்த படுக்கையிலேயே இருப்பதற்கு இறந்து விடுவோம் என்ற நிலைமையில் தான் அவர் இருந்திருக்கிறார். மேலும் பண உதவி செய்ய ஆளில்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவருடைய நிலைமை எந்த நடிகனுக்கும் வரக்கூடாது என பாரதிராஜா அழுது புலம்பி இருக்கிறார்.

Also Read:கமலுக்கு முன்பு சப்பானியாக நடிக்க இருந்த ஹீரோ.. அல்வா போல் கிடைத்த வாய்ப்பு, 45 வருட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்