Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே படத்தில் வேற லெவல் இரண்டு சினிமா! என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம்

yennanga-sir-unga-sattam-movie-review

Reviews | விமர்சனங்கள்

ஒரே படத்தில் வேற லெவல் இரண்டு சினிமா! என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம்

இயக்குனர் பாலச்சந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ பட ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ள சினிமா ‘என்னங்க சார் உங்க சட்டம்’. அதே கதாபாத்திரங்கள் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதைகள், ஆனால் இறுதியில் இணைவதே இப்படத்தின் ஸ்பெஷல் – டுப்ளக்ஸ் சினிமா. இயக்குனர் பிரபு ஜெயராமனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும். தயாரிப்பாளரிடம் சினிமா கதை சொல்லும் இயக்குனர் பார்வையில் தான் முழு படமும்.

முதல் பாதி முழுக்க இன்றையை 80ஸ் கிட்ஸ் அலப்பறை தான். பெண்கள் பின் சுற்றுவது, வேலைக்கு செல்லாமல் ஜாலி பண்ணுவது என முழுக்க முழுக்க கமெர்ஷியல் அம்சங்கள்.

இரண்டாவது பாதியில் ஒருபுறம் TNPSC நேர்முக தேர்வு; மறுபுறம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு இன்டெர்வியூ என படமாக்கியுள்ளனர் இந்த டீம். ஐயர் ஒருவர் அதிக மார்க் எடுத்தும் போஸ்டிங் கிடைக்க படும் பாடு, கோட்டா சீட் வாங்க துடிக்கும் அரசு அதிகாரியின் மகள் மற்றும் எளிய குடும்பத்து பையன் என படம் ஒருபுறம் விரிகிறது . மறுபுறம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதில் இடம்பெரும் சிக்கல்களை படமாக்கியுள்ளனர்.

ennanga sir unga sattam

ennanga sir unga sattam

ஜாதி பற்று சரி, ஜாதி வெறி தவறு என்ற கோணத்தையும், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மிக முக்கியம்; ஒரு முறை இடஒதுக்கீட்டை அனுபவித்தவர் மற்றொரு முறை அதை அனுபவிக்கக்கூடாது என்ற வாதங்களை முன்வைக்கிறது இப்படம்.

முதல் பாதி லயிட்டான சமாச்சாரம்; இரண்டாம் பாதி ஹாட் டாபிக். இரண்டாம் பாதியை மட்டும் படமாக்க ஆக்கியிருக்கும் பட்சத்தில் சில சர்ச்சைகளையும், பல விருதுகளையும் குவித்திருக்கும்.

இப்படம் துளியும் போர் அடிக்காமல் செல்கிறது, தீபாவளி விடுமுறையில் ஏற்ற டயம் பாஸ்.

ரேட்டிங்: 3 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top