Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்ததாம்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வில்லன் உதவியாளராக சமுத்திரக்கனி நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கி, தயாரித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் தனுஷ் நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லனாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளரிலேயே ட்விஸ்டுகள் வைக்கப்பட்டு, பல நாள் காத்திருப்புக்கு பிறகு தர்புகா சிவா என அறிவிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி சென்னையில் இந்தப் படப்பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. ஆனால், ஒவ்வொரு காரணத்தால் படத்தின் பணிகள் தொடர்ந்து முடங்கின. தற்போது, தனுஷ், பாலாஜி மோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடிக்க வேண்டி இருந்ததால், இப்படத்திற்கு நேரம் செலுத்த மறுத்துவிட்டதாலும் தயாரிப்புப் பணிகள் மீண்டும் தாமதமாகி உள்ளன.
முன்னதாக, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்ஸ் ‘மறு வார்த்தை பேசாதே…’, ‘நான் பிழைப்பேனோ…’, ‘விசிறி’ ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வைரல் ஹிட் அடித்தது. இன்னும் சில வேலைகளே இருப்பதால், விரைவில் படக்குழு ரிலீஸுக்கு படத்தை தயார் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் சமீபத்திய பேட்டியில் கண்டிப்பாக இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸின் உதவியாளராக கௌதமின் உதவி இயக்குனர் நடித்து இருக்கிறார். ஆனால், முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சமுத்திரக்கனி தானாம். ஆனால், ஒரு சில காரணங்களால் அப்படத்தில் சமுத்திரக்கனியால் நடிக்க முடியவில்லை என கௌதம் தெரிவித்து இருக்கிறார்.
