News | செய்திகள்
ஒரு ஓவரில் 40 ரன் எடுத்து அசத்திய இங்கிலாந்த் கிரிக்கெட் வீரர்.!!!
இங்கிலாந்தில் உள்ள கிராங்களை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஓவரி 40 ரன்களை அடித்து வெற்றி பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் ஸ்ரின் கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டியில் டார்செஸ்டர் – ஆன் – தேம்ஸ் அணியும், ஸ்வின்ப்ரூக் அணியும் மோதின.
45 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஸ்வின்ப்ரூக் அணி 240 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய டார்செஸ்டர் அணி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை 206 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் ஸ்டீவ் மெக்கோம் என்ற 54 வயதானவர் 40 ரன்களை எடுத்து வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். (ரன் விபரம் : No-Ball Six, Six, Dot, No-Ball Four, Four, Six,Six,Six)இதையடுத்து தோல்வியடைப் போகிறோம் என்ற வருத்தத்தில் இருந்த டார்செஸ்டர் அணி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது.
