Sports | விளையாட்டு
குண்டாக இருந்ததால் டீமை விட்டு தூங்கி விட்டார்களா.! என்னையா மைக்கேல் இது, புது குண்டா இருக்கு!
ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு புதிதாக ஒரு காரணத்தை சொல்கிறார், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
அவர் விராட் கோலி உடற்தகுதிக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி அதனால் தான் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்.
ரோஹித் சர்மா லாக்டவுனுக்கு பின் உடல் எடை அதிகமாகி விட்டார். இதை ரசிகர்கள் கூட ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் கிண்டல் செய்தனர். ஆனால், விராட் கோலி இந்திய அணியில் சிக்ஸ் பேக் வைக்காவிட்டாலும் ஃபிட்டான உடல் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா சற்று உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்படுகிறார். இதனால் அவர் காரியத்தை ஒரு காரணமாக வைத்து அவரை அணியை விட்டே நீக்கி இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் மைக்கேல் வாஹன்.
அணியின் துணை கேப்டனையே இப்படி ஒரு காரணத்துக்காக நீக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

rohit-sharma
