CSK

11 வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி வெற்றிகரமாக நடந்து வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு தோணி தலைமையில் களம் இறங்கியது சி எஸ் கே . விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில உள்ளது சென்னை. இரண்டு போட்டிகளிலும் சேஸிங்கின் பொழுது தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது.

மிச்சேல் சாட்னெர் – கேதார் ஜாதவ்

நியூசிலாந்தின் ஸ்பின் பௌலிங் ஆல் ரௌண்டரான சாட்னெர் அவர்களை சென்னை அணி 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்து. எனினும் காலில் எலும்பில் பிரச்சனை ஏற்பட்டதால் இவர் இந்த சீசன் ஆடாமல் விளக்கினார். நம் ஊர் ஜாதாவுக்கு காலில் ஹாம்ஸ்டரிங் பிரச்சனை மும்பையுடனான முதல் போட்டியில் ஏற்பட்டது, அவரும் இந்த சீசன் முழுவதும் ஆட மாட்டார்.

அதிகம் படித்தவை:  என்னை திணற வைத்தவர் இவர் தான்: டோனியின் பளிச் பதில்!
டேவிட் வில்லே
David Willey

இங்கிலாந்தின் யோர்க்ஷயரை சேர்ந்த இளம் ஆல்- ரௌண்டரான இவரை சி எஸ் கே மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் இவர். இங்கிலாந்துக்காக மத்திய வரிசையில் தான் ஆடுவார். எனினும் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக்கில் துவக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்கியுள்ளார்.

விரைவில் இவர் சென்னை அணியுடன் இணைவார். ஏற்கனவே மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் என இரண்டு இங்கிலாந்து பிலயேர்கள் இந்த டேம்மில் உள்ளனர்.