Connect with us

Cinemapettai

eng-aus-ban

Videos | வீடியோக்கள்

ஆஷஸ் – கேப்டன்கள் யாருமே செய்யாத மோசமான சாதனையை செய்த ஜோ ரூட்.. அதிர்ச்சியான வீடியோ

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஜோ ரூட் 3 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

மூன்று போட்டிகள் நிறைவடைந்த ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சமமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 196 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.

383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய நேர முடிவில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நேற்றைய போட்டியில் ஜோ ரூட் தனது இரண்டாவது இன்னிங்சை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி டெஸ்ட் கேப்டன்கள் வரலாற்றில் ஒரே தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆகி செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் மேனாக கருதப்பட்ட ஜோ ரூட்டின் இந்த ஆஷஸ் தொடர் பர்ஃபார்மன்ஸ், அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாக அமைந்து உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top