சிஎஸ்கேவுக்கு ஆடிய பின் எனது ஆட்டம் வேற லெவல்- கெத்தாக பேசிய ஆல் ரவுண்டர்

ஐபிஎல் என்பது ரசிகர்களுக்கு கிரிக்கெட் கொண்டாட்டம். ஆனால் வீரர்களுக்கு பணம் ஒருபுறம் இருப்பினும், தங்கள் திறன் வெளிப்பட நல்ல பிளாட் பார்ம் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சிறப்பானதாக அமையவில்லை. 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 வது இடத்தையே பிடித்தனர். இதற்கு முக்கிய காரணம் தோனி அனுபவம் வாய்ந்த வீரருக்கு வாய்ப்பை கொடுத்து விட்டு, இளம் வீரர்களை ஒதுக்கியது என்று கூட பலர் சொல்கின்றனர்.

எனினும் இந்த சீசன் 22 வயதான இங்கிலாந்தின் ஆல் ரௌண்டார் சாம் கர்ரனுக்கு சிறப்பாக அமைந்தது. சீசன் துவக்கத்திலேயே ப்ராவோவின் காயம் காரணமாக வாய்ப்பு கிடைத்தது. 13 விக்கெட்டுகள் எடுத்தார், பேட்டிங்கில் 23.25 ஆவெரேஜ் மற்றும் 131.91 ஸ்ட்ரைக் ரேட். அணைத்து போட்டிகளிலும் ஆடினார். ஒபெநிங் பேட்ஸ்மான், ஹிட்டர், பினிஷர் என ஒருபுறம், மறுபுறம் துவக்கத்தில், இறுதியில் பந்து வீசுவது என அணைத்து ரோல்களும் செய்தார்.

தற்பொழுது தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். முதல் டி 20 யில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார், டீம்மின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

அவர் பேசிய பொழுது, “ஐபிஎல் நான் மிகவும் என்ஜோய் செய்தேன். நிறைய கற்றுக்கொண்டான், எனது ஆட்டம், அடுத்த லெவலுக்கு சென்று விட்டது என்றே தோன்றுகிறது. சென்னை க்ரூப் மற்றும் பயிற்சியாளர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். அங்கு சென்ற பின் எனது ஆட்டம் மேம்பட்டுள்ளது. இன்னும் நன்றாக விளையாடி, இங்கிலாந்து டீம்மில் நிரந்திர வீரராக மாறவேண்டும்.” என சொல்லியுள்ளார் சுட்டி குழந்தை என்கின்ற கடை குட்டி சிங்கம் கர்ரன்.

sam curran csk

சென்ற சீசன் பஞ்சாப் டீமுக்கு ஐபிஎல் இல் ஆடினார் சாம்.