Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகி பாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி போஸ்டருடன் அறிவிப்பு.. கூடவே கலக்கிய மொட்டை ராஜேந்திரன்
Published on
தமிழ் சினிமா தொடர்ந்து தற்போது பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் அகில் மற்றும் யோகிபாபு இணைந்து கலக்கும் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது.
இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா மற்றும் ஆதித்யா சேனல் லோகேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாராயணன் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தில் யோகிபாபு பள்ளி பயனாக சைக்கிள் ஓட்டி வருகிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன் மரம் ஏறும் தொழிலாளியாக நடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள படத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

yogibabu
அதுமட்டுமில்லாமல் கெவின் இயக்கிய இப்படத்திற்கு எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என பெயர் வைத்துள்ளனர். வருகிற மார்ச் 26ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர்.
