தமிழில் புதிதாகத் தொடங்கப்பட்ட சேனல் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கு சுயம்வரம் நடத்தும் வகையில் ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தப்பட்டது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட அந்த ஷோவின் இறுதிச் சுற்றுக்கு 3 பெண்கள் தேர்வாகினர். இதில் யாராவது ஒருவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி போட்டியாளர்களை அதிரவைத்தார் ஆர்யா. தமிழ் டிவி சேனல்களில் யாரும் இதுவரை எடுக்காத முயற்சியாக அமைந்த அந்த நிகழ்ச்சிக்கு தொடக்கம் முதலே பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. இருப்பினும் சேனல் நிர்வாகம் அந்த எதிர்ப்புகளைத் திறம்பட சமாளித்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தது.

arya
arya

போட்டியில் முக்கியமான ஒருவரான அபர்ணதி, பைனலுக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டார். அவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒருமையில் பேசுவது, ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வது என சில விஷயங்களால் அவரை போட்டியிலிருந்து வெளியேற்றினார் ஆர்யா. தன்னால் வெளியேற முடியாது என அந்த இடத்திலேயே வாக்குவாதத்தில் அபர்ணதி ஈடுபட்டார். பிறகு ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

arya

இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அபர்ணதியிடம் நடிகர் ஆர்யா உங்களை விடுத்து வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு நம்பிக்கையுடன் பதிலளித்த அபர்ணதி, ஆர்யா மீதான காதலில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால். நான் வேறு யாரையும் என்னுடைய வாழ்வில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என்னுடைய வாழ்வின் மீதமுள்ள 40 முதல் 50 ஆண்டுகளை நான் எனக்காக மட்டுமே வாழ்வேன். எனக்குத் திருமணத்தில் ஆர்வமில்லை. வாழ்வில் திருமணத்தைத் தவிர வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களைத் தேடுவதில் நான் கவனம் செலுத்துவென் என்று போல்ட் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.