Tamil Cinema News | சினிமா செய்திகள்
அபர்ணதியால் நள்ளிரவு வரை தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை டீம்…
ஆர்யாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை டீமையே அலற விட்ட தகவலை தொகுப்பாளர் சங்கீதா தன் சமீபத்திய பேட்டியின் மூலம் வெளியிட்டு இருக்கிறார்.
வட மாநிலங்களில் பிஸி தொலைக்காட்சியாக இருந்த கலர்ஸ் தமிழில் கால் பதித்தது. அறிமுகத்தின் குஷியையும் ரசிகர்களையும் கவர்ந்திழுக்க ஒளிபரப்பப்பட்டது தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் ஆர்யாவிற்கு மணமகளை தேடுவது தான் இந்நிகழ்ச்சி என கூறப்பட்டது. ஆனால், நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவருமா? இந்தியில் வெளியாகிய இந்நிகழ்ச்சியின் ஒரிஜினல் வெர்சனில் எல்லாம் பிரபலங்கள் யாரையோ தேர்வு செய்தாலும் கடைசியில் டாட்டா காட்டிய கதை தான் என்பதால் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இளைஞர்களுக்கு ஒரு ஜோடியே கிடைக்கவில்லை இவருக்கு என்னப்பா 16 பேர் என்பது வேறு கோபம். இப்படி பரபரப்புடன் ஆரம்பித்தாலும் அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நிறைய பேர் இருந்தது என்பது உண்மை தான். பல டாஸ்குகள் வைக்கப்பட்டு 4 நாட்கள் இடைவெளியில் ஒருவர், இருவர் என வரிசையாக வெளியேற்றப்பட்டனர். ஆர்யா அந்நிகழ்ச்சியில் காட்டிய ஈடுபாட்டால் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என வரவேற்பு பெருகியது. இதை தொடர்ந்து, கடைசி ஐந்து போட்டியாளர்களாக சீதாலட்சுமி, சுவேதா, அகாதா, சுசானா மற்றும் அபர்ணதி தேர்வாகினர். அதை தொடர்ந்து, ஒவ்வொரு போட்டியாளர் வீடுகளுக்கும் ஆர்யா சென்று அவர்களை புரிந்து கொள்ள முனைந்தார். அட கல்யாணம் கன்பார்ம்டா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இவர்கள், ஐந்து பேரில் சுவேதா மற்றும் அபர்ணதி இருவரும் வெளியேற்றப்பட்டு மற்ற மூவருக்கும் சங்கீத், மெஹந்தி நிகழ்ச்சிகள், பட்டுப்புடவை, நகைகள் என திருமணத்திற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படி, சென்று கொண்டு இருந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து கஷ்டப்படுத்தணுமா என ஆர்யா யாரையுமே தேர்ந்தெடுக்கவில்லை. இப்போ விஷயம் அது இல்லை.
அபர்ணதி வெளியேறிய சமயம், நமக்கு காட்டியது என்னவோ அரை மணி நேர காட்சிகள் மட்டும் தான். ஆனால், 10 மணிக்கு நடைபெற்ற சூட்டிங்கில் அபர்ணதியை சரி செய்ய ஆர்யா உட்பட எங்க வீட்டு மாப்பிள்ளை டீம் நள்ளிரவு 4 மணி வரை போராடினார்களாம். இதுவே, ஆர்யாவிற்கு பெரிய போராட்டமாகி விட்டதாக அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.
