கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் spoof திரைப்படம்தாங்க “தமிழ் படம்”, எத்தனையோ நகைச்சுவை படங்கள் தமிழ்ல வந்திருந்தாலும் லொள்ளு சபா பாணில தமிழ் படங்கள்ல காலா காலமா நடக்கிற அலுத்துப்போன விஷயங்களை மரணமா கிண்டலோ கிண்டல் செஞ்ச படம்தாங்க இது.

மிர்ச்சி சிவா நடிப்புல C.S.அமுதன் இயக்கத்துல வெளிவந்த இந்த படம் எல்லா தரப்பினராலும் வெகுவா பாராட்டப்பட்டது. சிவாவுக்கு இதுக்கு அப்புறம்தான் கொஞ்சமாவது படங்கள் வர ஆரம்பிச்சுது.

இப்படிபட்ட வெற்றியை தொடர்ந்து அமுதன் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை எடுத்தாரு, அந்த படத்திற்கு ரெண்டாவது படம்னு பேரும் வைச்சு படத்தையும் எடுத்து முடிச்சுடாருங்க. இந்த படத்துல விமல், விஜயலட்சுமி, சஞ்சனா நடிச்சுருக்காங்க. ஆனா படம் எடுத்து நாலு வருசமாகியும் இன்னும் பல பிரச்சனைகள்னால படம் வெளிவரலை.

endhiran-2-0 teaserபொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர் கடுப்பாகி அந்த படத்தை விட்டுட்டு அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்துருக்காரு. படத்துக்கு பேரு “தமிழ் படம் 2.0”. நம்ம எந்திரன் 2.0வை கிண்டல் செய்யும் விதமா இந்த படம் இருக்கும்னு சொல்லப்படுது.

இந்த படத்துலயும் மிர்ச்சி சிவாதான் ஹீரோவா நடிக்க போறாரு. முதல் படம் மாதிரி இந்த படமும் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும்னு இயக்குனர் சொல்லிருக்காரு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பச்ச ரோஸ் மஞ்ச பிங்க் தமிழன் நான்….