சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

முடிச்சு தொலைங்கடா.. 1316 எபிசொடே கடந்த சீரியலை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

திரைப்படங்களை விட சீரியல்களை அனுதினமும் ரசிகர்கள் பார்ப்பதால் அவை எளிதில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும். இன்னிலையில் ஒரு சீரியல் 1316 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிறது என்பது சாதாரண விஷயமல்ல. அப்படி இருக்கையில், ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் சீரியலாக இருந்த ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் தற்சமயம் ரசிகர்களால் விமர்சிக்கப்படும் சீரியலாக மாறிவிட்டது.

இந்தத் தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திக்ராஜ், ஷபானா, பிரியா ராமன், ஊர்வம்பு லட்சுமி ஆகியோர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களில் 1250 எபிசோடை கடந்த சாதனை பெற்ற சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதன்பிறகு இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரை விட்டு விலகிய ஒரே காரணத்தினால் அவர் விலகிய 877 -வது எபிசோடில் இருந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எபிசோட் வரை ரசிகர்களுக்கு பிடிக்காத தொடராகவும் டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் இந்த சீரியலின் தயாரிப்பாளர் செம்பருத்தி தொடரை முடித்து விட முடிவெடுத்துவிட்டார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருப்பதால், அதற்கு ரசிகர்களின் மத்தியில் காரசாரமான கமெண்ட்டுகள் வந்து குவிகிறது.

‘சனியன் ஒழிய போகுது’ என்றும் ‘எங்க ராஜா போன பிறகு செம்பருத்தி சீரியல் குப்பைத் தொட்டி ஆயிருச்சு. கப்பு தாங்கல’ என்றும் ‘செம்பருத்தி சீரியல் முடிய போகுது என கேட்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது’.

செம்பருத்தி சீரியல் ஒரு காலத்தில் சூப்பர்ஹிட் சீரியல் இருந்தது. ஆனால் அதை நாசம் பண்ணிட்டாங்க என்றும் கார்த்திக் ராஜ் கதாநாயகனாக நடித்த எபிசோட் செம்பருத்தி சீரியலின் மாஸ்டர்பீஸ் ஆக இருந்தது. 1 டிசம்பர் 2020 அன்று கார்த்திக்ராஜா விலகிய அன்றைக்கே செம்பருத்தி முடிஞ்சு போச்சு என்று நெட்டிசன்கள் செம்பருத்தி சீரியல் நிறைவடைவதை குறித்து கமெண்ட் அடிக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News