இளம் இயக்குநர் எடுத்துவரும் படத்தில், மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார் தளபதி. அப்பா – இரு மகன்கள் என்று அமைந்துள்ள கேரக்டர்களுக்கு ஜோடியாக, மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அப்பாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

ஒரு மகனுக்கு ஸ்வீட் கடை நடிகையும், இன்னொரு மகனுக்கு சரும நடிகையும் ஜோடி போட்டுள்ளனர். இதில், ஸ்வீட் கடை நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகளை, ஐரோப்பாவில் படமாக்கி வருகின்றனர். இந்த மாத இறுதியுடன் அங்கு படப்பிடிப்பை முடித்து, சென்னை திரும்புகின்றனர்.அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து சரும நடிகையின் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில், ‘அவளுக்கு மட்டும் ஃபாரீன் லொக்கேஷன், எனக்கு உள்ளூரா?’ என்று ஸ்வீட் கடை நடிகை மீது பொறாமையில் இருக்கிறாராம் சரும நடிகை.