கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே பாக்கியிருப்பதாக கௌதம் அறிவித்துள்ளார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.