சோலையம்மா கதாபாத்திரம் எப்படிப்பட்டது என கேட்ட ரசிகர்.. ராஜ்கிரணை பற்றி வெளிப்படையாக கூறிய மீனா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. அதனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் மீனா.

நடிகர் மீனாவின் திரைவாழ்க்கையில் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படுவது என் ராசாவின் மனசிலே இடம்பெற்ற சோலையம்மா கதாபாத்திரம்தான். சோலையம்மா கதாபாத்திரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு மீனாவின் பதில் என்ன தெரியுமா.

சோலையம்மா கதாபாத்திரம் அன்பும், பாசமும் வைத்திருக்கும் ஒரு மனைவி தன் கணவனுக்காக பயப்படக்கூடிய ஒரு கதாபாத்திரம் எனக் கூறியுள்ளார். மேலும் இவரது திரை வாழ்க்கையில் எத்தனை கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் சோலையம்மா கதாபாத்திரம் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

en rasavin manasile
en rasavin manasile

மேலும் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்க வேண்டும் அப்போது எனக்கு சிறிய வயது என்பதால் அதனை என்னால் உள்வாங்கி நடிக்கவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார். மேலும் மீனாவை பார்த்து உண்மையாகவே கர்ப்பிணி பெண்ணை நினைத்து கர்ப்பிணி காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் பாசத்துடன் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ராஜ்கிரன் அவர்களுடன் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் முதலில் இயக்குனர் தன்னிடம் கதையை பற்றி மட்டும் கூறினார் நடிகர் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிப்படுத்தவில்லை ஒரு சில நாட்களுக்கு பிறகு படத்தின் தயாரிப்பாளர் தான் அப்படத்தின் ஹீரோ என தெரிந்தவுடன் நடிகர் மீனா ஷாக் ஆனதாகவும் ஆனால் ராஜ்கிரன் அவர்களுடன் நடித்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை பார்க்கும்போது சந்தோசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜ்கிரண் ஒரு நல்ல குணம் உள்ள மனிதர் எந்த இடத்திலும் கோபமும் படாமல் பொறுமையாக கையாளக் கூடியவர். இவருடன் நடித்தது தனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

- Advertisement -