India | இந்தியா
EMI கட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் தப்பிக்கலாம்
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நெருங்கிவிட்டது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இறந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி அடுத்த 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் மட்டும் இன்று காலை 9 மணி நிலவரப்படி 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேர் இறந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் அறிக்கையின்படி நேற்றைய தினம் நிர்மலா சீதாராமன் கூறியது என்னவென்றால் ஏடிஎம்மில் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம், பான் கார்டு மட்டும் ஆதார் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, வருமான வரி கட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது எல்லாம் அரசாங்கத்திற்கு நாம் கூடுதலாக கட்டிக் கொண்டிருந்தோம் மற்றும் அரசு நமக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் மக்கள் இந்த சூழ்நிலையில் மாதம்தோறும் கட்டும் EMI நினைத்து கவலை கொண்டுள்ளனர். ஏனென்றால், இந்திய அளவில் 80 சதவீத மக்கள் பலவிதமான லோன்களை நம்பி தான் உள்ளனர்.
ஒரு மாதம் EMI கட்ட வில்லை என்றால் சிபில் ஸ்கோர் கண்டிப்பாக இறங்கிவிடும், அதுமட்டுமில்லாமல் வருமானம் இல்லாத இந்த சூழ்நிலையில் வாடகைக்கு கூட வழியில்லாத நடுத்தர மக்கள் என்ன செய்வதென்று முழி பிதுங்கி உள்ளனர்.
இதனால் இந்த EMI கட்டுவதற்கான கால அவகாசத்தை இயல்பு நிலை திரும்பும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்தக் கோரிக்கை பிரதமர் மோடி காதில் கேட்குமா அப்படிக் கேட்டு அரசாங்கம் உதவி செய்தாள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறலாம். change.org என்ற இணையத்தில் பிரதமருக்கு நமக்கு தேவையான வேண்டுகோளை கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் மாத தவணைகளை தள்ளி போடா வாய்ப்பு உள்ளது.
நேற்றைய உரையின்போது பிரதமர் மோடி அத்தியாவசிய பொருட்கள் கண்டிப்பாக கிடைக்கும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். கண்டிப்பாக அரசின் அடுத்த உரையின் போது இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
