ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

இதெல்லாம் தேவையா பாஸ்.. 5 ஆண்டு சிறை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய எலான் மஸ்க்

எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ள எலான் மஸ்க் மீண்டும் ஒரு நல்லது செய்யப்போய் அது விமர்சனத்திற்கு உள்ளாகவே அவருக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

உலகில் சாதிப்பது ஒன்றும் எளிதல்ல. அதற்கு சரியான திட்டமிடல், கடினமான உழைப்பு, கனவுகளை நோக்கி ஓடி, அவற்றை செயல்படுத்தும் ஆற்றல் இவையெல்லாம் இருந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியுமா என்றால் மேற்கூறியதை மக்களிடமும் சந்தையிலும் கொண்டு போய் சேர்க்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.

அது என்னவோ எலான் மஸ்கிடம் கொட்டிக் கிடக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதனால் எதையும் விளையாட்டாக பேசினாலும் அதையும் டெம்ளேட்டாகி, அதிலும் காசு பார்க்கும் வித்தை தெரிந்தவர் எலான் மஸ்க். அதனால்தான் இன்று எக்ஸ் எனும் டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளராக இருக்கிறார்.

எலான் மஸ்க் சர்ச்சையில் சிக்கி, கோர்டு கேஸ் என எதையும் சந்திக்காதவர் அல்ல, வாய் விட்டு சர்ச்சை விவகாரத்திலும் வினையிலும் சிக்காதவரும் அல்ல. அவருக்கு அதெல்லாம் பழகிப் போன ஒன்றுதான். தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் வரை, தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் அதாவது 8 கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரம்

விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்களாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையிலான போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஹாலிவுட் நடிகர்கள், WWE வீரர்கள் உள்ளிட்டோர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

உலகின் டாப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கும் ட்ரம்புக்கு ஆதரவாக பல்வேறு வகையில் பிரச்சாரமும் சேட்டைகளும் செய்து வருகின்றார். அந்த வகையில் குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்புக்கு ஆதரவாக புதிய திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்தார். அதன்படி, துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் உள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு பெற்று, விண்ணப்பங்களில் 10 லட்சம் கையெழுத்து வாங்குவதை இலக்காக வைத்திருகிறார் எலான் மஸ்க்.

ஓட்டுக்குப் பணமா? 5 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் எச்சரிக்கை

அதில், பென்சில்வேனியாவில் இவ்விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் அதாவது 8 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். சொன்னபடியே சிலவருக்கு அவர் பரிசு வழங்கினார். இது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

எலானின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா நீதிமன்றம் கண்டித்து அவரை எச்சரித்துள்ளது. இத்திட்டம் என்பது அமெரிக்கா நாட்டின் சட்டத்தை மீறுவதகவும், ஓட்டுக்குப் பணம் அளிக்கும் செயலாக இருப்பதால் இதை தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இது நீதித்துறையில் சிவில் குற்றத்திற்கு உட்பட்டது என்பதால், இதை அவர் மீறினால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என சட்ட நிபுணர்களும் கூறியுள்ளனர்.

எலான் மஸ்க் எதார்த்தமாக செய்த செயல் நீதிமன்றம் கண்டிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. இதனால் அவர் யாரிடமாவது கேட்டு ஆலோசனை செய்து கொண்டு இதுமாதிரி முடிவெடுக்கலாம். இப்படி ஆர்வக்கோலாரில் முடிவெடுத்து சிக்கலில் மாட்டுவதெல்லாம் தேவையா பாஸ்? என பலரும் அவருக்கு சமூக வலைதளங்களின் வழி அறிவுரை கூறிவருகின்றனர். ஆனால் இதற்கும் மாற்றாக வேறு எதாவது வழி ஒன்றை எலான் யோசித்திருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News