புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

95-வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய படம் தகுதி.. 15 நிமிடத்தில் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க போகும் இயக்குனர்

ஆஸ்கர் விருதுக்கு இந்திய படம் ஒன்று தகுதிப் பெற்றுள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு கூறிவருகின்றனர்.

சினிமா உலகின் உச்ச விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது பெற கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை அனைத்து சினிமா கலைஞர்களும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். எப்படியாவது தங்கள் கலைவாழ்வில் ஒருமுறையாவது ஆஸ்கர் விருது வாங்க வேண்டும், அல்லது ஆஸ்கர் விருது வாங்கும் படங்களிலாவது பணியாற்றிவிட வேண்டும் என்று விருப்பத்தில் இருப்பர்.

அந்த வகையில் ஆஸ்கர் விருது சினிமா கலைஞர்களின் பெருமையாகவும் இலக்காகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் விருதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வெளி நாட்டு திரைப்படம், சிறந்த குறும்படம் சிறந்த டாகுமெண்டரி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

95 வது ஆஸ்கர் விருது

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு 95 வது ஆஸ்கர் விருது போட்டிக்கு சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் லப்பட்டா லேடீஸ் என்ற பாலிவுட் படம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, நடிகர்கள் நடிப்பு ஆகியவை பெரிதும் பேசப்பட்ட நிலையில், கிராமப் பெண்களின் வாழ்வியல், திருமணத்திற்குப் பின் அவர்களின் நிலைப் பற்றி பேசுகிறது. அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். அமீர்கான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் , 2025 ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு கன்னட மொழி குறும்படம் சன் பிளவர்ஸ் தகுதி பெற்றுள்ளது என இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இக்குறும்படத்தை சித்தானந்தா இயக்கியுள்ளார். 15 நிமிடங்கள் ஓடும் இப்படம் இந்திய நாட்டுப்புற கதைகள், புராண மரபுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படம், ஏற்கனவே பெங்களூரு குறும்பட விழாவில் பங்கேற்று விருது வென்ற நிலையில் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இந்த நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி, ஆஸ்கர் விருது விழா நடக்கும் நிலையில், விரைவில் இதன் இறுதி செய்யப்பட்ட நாமினேசன் வெளியிடுவார்கள்.

விருது பெரும் என ரசிகர்கள் நம்பிக்கை

இந்தியா சார்பில் 95 வது ஆஸ்கர் விழாவின் தி எலிஃபெண்ட் விஸ்பர்ஸ் படம் சிறந்த டாகுமெண்டரி பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் சன் பிளவர் படமும் நிச்சயம் ஷார்ட்பிலிம் பிரிவில் விருது வெல்லும் எனவும் அதேபோல், இந்திய சினிமாவின் கனவாக இருக்கும் சிறந்த படத்தின் பிரிவில் லப்பட்டா லேடீஸும் விருது பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் இதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News