Yeidhavan_cinemapettai

5ம் தேதி வெளியாகவிருந்த ‘எய்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி 12ம்தேதி வெளியாகவுள்ளது.

கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வருகிற மே 5-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பால், இந்த வாரமும் அந்த படமே அதிக திரையரங்குகளை ஆக்கிரமிக்கக்கூடும்.