தமிழ் சினிமாவில் நடிப்பு நாயகன் மற்றும் நடிகர் திலகம் என பெயர் பெற்றவர் சத்ரபதி சிவாஜி. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன.
முதலில் சிவாஜியை திரையில் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சிவாஜியின் நடிப்பிற்காக ஏராளமான கூட்டங்கள் திரையரங்கில் கூட தொடங்கின.
சினிமா தோன்றி பல வருடங்கள் ஆனாலும் இன்று வரை யாராலும் அசைக்க முடியா ஒரு சாதனையை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்று பார்ப்போம்.நடிப்பின் மூலம் பல விருதுகளைப் பெற்ற சிவாஜி இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அது என்னவென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்ஆங்கிலேயரை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு சிவாஜி நடிப்பிற்காக நேரில் பார்க்க வேண்டும் என எகிப்து நாட்டு பிரதமரான ஜமால் அப்துல் நாசர் என்பவர் ஆசைப்பட்டு உள்ளார்.
அப்போது இந்தியாவில் பிரதமராக இருந்த ஜவர்கலால் நேருவிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகரான சிவாஜியை நேரில் பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பிறகு சிவாஜியை நேரில் பார்த்து நடிப்பிற்காக பாராட்டியுள்ளார். மேலும் ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு நடிகரை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என கூறியது அன்றைய காலத்தில் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் சிவாஜி பார்ப்பதற்காக சொந்த நாட்டிலேயே வந்து பார்த்த பெருமை சிவாஜி தான் சேரும். அதேபோல் கலாச்சார தூதுவராக அன்றைய காலத்திலேயே அமெரிக்கா சென்ற ஒரே ஒரு நடிகர் சிவாஜி மட்டும் தான்.
இந்த மாதிரி சிவாஜி தனது நடிப்பை தாண்டியும் பல சாதனைகளை படைத்துள்ளார் இதுவரைக்கும் உலகிலேயே ஒரு நடிகருக்காக ஒரு நாட்டின் பிரதமர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.