ஈகோவால் வரும் பெரும் ஆபத்து.. ஜெய் பீம், டாணாக்காரன் படங்களுக்கு வந்த சோதனை

கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்தே ஓடிடி பிளாட்பாரம் தென்னிந்திய சினிமாக்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. 2020 ல் ரிலீசுக்கு தயாராக இருந்த நிறைய படங்கள், ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. கடந்த 2 வருடங்களாக நிறைய படங்கள் இதுபோல் நேரடி ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஓடிடியில் ரிலீஸ் ஆன சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் தேசிய விருது வாங்கி இருக்கிறது.

மீண்டும் திரையரங்கில் படங்கள் ரிலீஸ் ஆக ஆரம்பித்த பிறகு, தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் சில மாதங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன. இதில் பட தயாரிப்பாளர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கின்றது. விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டர் ரிலீசிற்கு முன்பே ஓடிடி தளங்கள் ரிலீஸ் உரிமத்திற்கு விலை பேசி முடித்துவிடுகின்றன.

Also Read: பொருத்து பொருத்து பார்த்து பொங்கி எழுந்த சூர்யா.. வணங்கான் படப்பிடிப்பில் பாலா செய்த 5 தில்லாலங்கடி வேலை

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மக்களிடையே வரவேற்பை பெரும் படங்கள் மீண்டும் ஓடிடி தளங்களால் விலைக்கு வாங்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெறுகின்றன. ஆனால் ஓடிடி தளங்களில் நேரடி ரிலீஸ் ஆகும் படங்கள் மீண்டும் தியேட்டர் ரிலீசுக்கு வருவதில்லை.

ஜெய் பீம், டாணாக்காரன் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. சூர்யா நடித்து ஜெய் பீம் திரைப்படம் ஒரே நாளில் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி அனைவரது பாராட்டையும் பெற்றது. போலீஸ் பயிற்சிக்கு செல்லும் விக்ரம் பிரபுவுக்கு அங்கிருக்கும் பயிற்சியாளர்களால் நடக்கும் தொந்தரவுகளை மையமாக கொண்ட டானாகரன் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read: ரிலீசுக்கு முன்பே கொடி கட்டி பறக்கும் பிசினஸ்.. எதிர்பார்ப்பைக் கிளப்பிய சூர்யா சிறுத்தை சிவா கூட்டணி

சர்பட்டா பரம்பரை , ஜெய்பீம், டாணாக்காரன் போன்ற திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே நல்ல வரவேற்பை பெரும் போது, தியேட்டர் ரிலீஸ் செய்திருந்தால் இதைவிட அதிகமாகவே வசூல் செய்திருக்கும், இன்னும் அதிகமாகவே ரீச் ஆகி இருக்கம்.

இது போன்று நல்ல ரீச் கொடுக்கும் படங்களை மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்மந்தப்பட்ட ஓடிடி தளங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் ஓடிடி தளங்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனையால் இது போன்ற படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக முடியாமல் போகிறது.

Also Read: பேட்டைக்காளி, வாடிவாசல் ஒரே கதை தானா.. வெற்றிமாறன் கூறிய ஷாக்கான பதில்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்