அதிரடி திருப்பங்களுடன் வெளிவந்த ஈரமான ரோஜாவே2.. ரணகளமான முதல் வாரம்!

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே தற்போது புது புது சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் முத்தழகு என்ற புது சீரியல் துவங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

இதைத்தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்ற சீரியலின் இரண்டாம் பாகம் துவங்கப்பட உள்ளது. இந்த சீரியலில்  திரவியம் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்து, இரண்டாம் பாகத்திலும் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவரைத் தவிர தேன்மொழி சீரியல் கதாநாயகனாக நடித்த சித்தார்த் இரண்டாம் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆகையால் சித்தார்த் மற்றும் திரவியம் இருவரும் ஈரமான ரோஜாவே2 சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளனர். இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதில் கதாநாயகன் ஜீவாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா – காவியா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

எனவே ஜீவா மற்றும் காவியா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மேலும் ஜீவாவின் அண்ணன் சித்தார்த்திற்கும் காவியாவின் அக்காவிற்கும் திருமணம் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் காவியாவின் அக்காவை யாரோ கடத்திக் கொண்டு செல்ல, மணமகளாக காவியா மாறிவிடுகிறார்.

இதனால் சித்தார்த்திற்கும் காவியாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஜீவா காவியாவின் அக்காவை கடத்திச் சென்றவர்களிடமிருந்து காப்பாற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அதற்கு முன்பே காவியாவிற்கு சித்தார்த் இருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது.

இதைப்பார்த்த ஜீவா கண்கலங்க, மணக்கோலத்தில் இருக்கும் காவியாவும் அழுகிறாள். அதன் பிறகு ஜீவாவிற்கும் காவியாவின் அக்காவிற்கும் திருமணம் நடைபெறுகிறது. இவ்வாறு இரண்டு காதல் ஜோடி மாறி திருமணம் செய்து கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை துவங்கும் ஈரமான ரோஜாவே2 சீரியல் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.