fbpx
Connect with us

தனுஷ் கண்டுகொள்ளவில்லை – வருத்தத்துடன் கூறிய கிஷோரின் தந்தை

News | செய்திகள்

தனுஷ் கண்டுகொள்ளவில்லை – வருத்தத்துடன் கூறிய கிஷோரின் தந்தை

kishore_640x480_71425643487தனுஷ் தயாரித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது என்பது அனனவரும் அறிந்ததே. இதில் ஒன்று சிறந்த எடிட்டருக்கான விருது மறைந்த கிஷோருக்கு கிடைத்தது. தேசிய விருது கிடைத்தபோதிலும் கிஷோர் குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்தில்தான் உள்ளனர்.

கிஷோரின் 76 வயதான கிஷோரின் தந்தை தியாகராஜன் பொருளாதார ரீதியில் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றாராம். மேலும் ஆடுகளம் படத்தயாரிப்பின்போது தனுஷும் கிஷோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்றும் ஆயினும் தனது மகன் மரணம் அடைந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் தனுஷிடம் இருந்து ஒரு போன்கால் கூட வரவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது தங்களுடைய கஷ்டமான சூழ்நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் ரூ.2 லட்சமும், சரத்குமார் ரூ.1 லட்சமும் அளித்ததாகவும் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பல உதவிகள் செய்ததாகவும் கூறிய கிஷோரின் தந்தை தியாகராஜன், தனது மகன் சினிமாவுக்காகவே வாழ்ந்து உயிரை விட்டதாகவும், தேசிய விருதுகளை தவிர அவர் வேறு எதுவும் தங்களுக்கு சம்பாதித்து கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top