Connect with us
Cinemapettai

Cinemapettai

edharkum-thunindhavan

Videos | வீடியோக்கள்

வக்கீலாகவும் கிராமத்தானாகவும் விஸ்வரூபம் எடுத்த சூர்யா.. மிரட்டும் எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சூரி, வினய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சமீபகாலமாக சூர்யா பல சமூக கருத்துகள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக்கேட்கும் மாஸ் ஹீரோவாக பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

வழக்கமாக பாண்டிராஜ் இயக்கும் திரைப்படங்களில் குடும்ப சென்டிமென்ட் இருக்கும். இந்த வரிசையில் இந்த படத்திலும் சூர்யா சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நம்மை மிரள வைத்திருக்கிறார் அதிலும் நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற, நான் வேட்டிய கட்டுனா நான்தான் ஜட்ஜ் போன்ற வசனங்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

மேலும் டாக்டர் படத்திற்கு பிறகு வினய் இதில் தனது வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் வில்லத்தனத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. இனி வரும் திரைப்படங்களில் வில்லன் ரோல் என்றால் அவரை கூப்பிடும் அளவுக்கு ரொம்ப மிரட்டலாக இருக்கிறது.

அதோடு சூரி, விஜய் டிவியின் புகழ் ஆகியோரின் காமெடி காட்சிகளும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று தெரிகிறது. ஆக மொத்தத்தில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா வக்கீலாகவும், கிராமத்தானாகவும் ஒரு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Continue Reading
To Top