இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, விஜய் டிவி புகழ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர்.

சமீபகாலமாக சமூக கருத்து கொண்ட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சூர்யா இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பை பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ட்விட்டரில் இந்த படத்தை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். பாண்டிராஜின் வழக்கமான கிராமத்து திரைப்படங்களைப் போலவே இந்தப் படமும் அற்புதமாக இருக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கையில் எடுத்துள்ள இந்த படம் பெண்கள் தினத்தை கொண்டாடி வரும் இந்த வேளையில் சரியான நேரத்தில் வெளிவந்து இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தில் அது சம்பந்தப்பட்ட பல காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் வினய் அசத்தல் வில்லனாக மிரட்டி இருக்கிறார். படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிக் குவியலாகவும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதிலும் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உட்பட அனைவரும் தங்கள் காட்சிகளை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை ரசிகர்கள் கதையுடன் மிகவும் நெருக்கமாக பயணிக்கும் வகையில் இப்படம் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் இந்தப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் வகையில் வெளிவந்திருக்கிறது.
