Connect with us
Cinemapettai

Cinemapettai

edapaddi-palanisami-admk-1

Tamil Nadu | தமிழ் நாடு

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய எடப்பாடியார்.. குவியும் பாராட்டுக்கள்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளை தமிழகத்தில் உருவாக்கும் வண்ணம் பல நிறுவனங்களுடன் புத்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பித்து தமிழகத்தை ஒரு சிறந்த தொழில் மாநிலமாக மாற்றிக் காட்டினார் எடப்பாடியார்.

அதேபோன்று பல்வேறு நலத் திட்டங்களால் தற்போது இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மாநிலமாக தமிழகத்தை செதுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி.

அதாவது இன்று சென்னை வடபழனியில் புதிதாக தொடங்கப்பட்ட  மருத்துவமனை விழாவில் முதல்வர் பேசியபோது தமிழகத்தில் மருத்துவத்திற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்றும், பிரசவத்தின்போது ஏற்படும் தாய்-சேய் இறப்பு விகிதம் பல மடங்கு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடியார்.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தமிழகத்தின் மருத்துவ முன்னேற்றத்தை பார்த்து வியந்து உள்ளது என்றால் அதற்கு காரணம் எடப்பாடி அரசின் சிறந்த நலத்திட்டங்கள் தான்.

ஏனெனில் இந்தியாவிலேயே ரூபாய் 18,000 பிரசவத்திற்காக வழங்கப்படுவது தமிழகத்தில் மட்டும் தான் என்றும், இதன் காரணமாகவே அதிக அளவு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடியார்.

இவ்வாறு தமிழகத்தில் மருத்துவ துறையில் பல்வேறு மாற்றங்கள்  நிகழ்ந்து தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மாநிலமாக திகழ்கிறது. இதனால் பல தரப்பினரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு பாராட்டுக்கள் குவித்த வண்ணம் இருக்கின்றனர்.

edapaddi-palanisami-admk

Continue Reading
To Top