fbpx
Connect with us

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய எடப்பாடியார்.. முதல்வரை பின்பற்றும் மற்ற மாநிலங்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய எடப்பாடியார்.. முதல்வரை பின்பற்றும் மற்ற மாநிலங்கள்!

தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தொற்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் இதை ஒவ்வொரு நாடும் மாநிலமும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இன்னும் ‘கட்டுக்கடங்காத காளை போல’ பரவிக் கொண்டுதான் இருக்கிறது இந்த கொரோனா.

இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர்  எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது சிறந்த ஆளுமை  திறனினால் சிறப்பான முறையில் இந்த கொரோனாவை எதிர்கொண்டு, மக்களைப் பாதுகாத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வரை பின்பற்றி சில மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் குணமடைந்தார் விகிதம்(94%) மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவில் உள்ளது. தற்சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக குறைந்துள்ளது எடப்பாடியாரின் சாதனையாகவே கருதப்படுகிறது.

மேலும்  கொரோனா தடுப்பு  மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், ‘கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்’ என்ற மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பு பாமர மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

அதாவது இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் இது போன்ற ஒரு அறிவிப்பை  அறிவித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தற்போது எடப்பாடி அவர்களின் வழியை பின்பற்றி பிற மாநிலங்களான மத்திய பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவையும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாட்டிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது என்பதற்கு சான்றாக அமைகிறது.

இந்த  அறிவிப்பால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைய போகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனால் தமிழக மக்கள் அனைவரும் முதல்வரின் இந்த அறிவிப்பை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளதோடு முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

edappadi-corona

edappadi-corona

Continue Reading
To Top