Connect with us

Cinemapettai

முன்னேற்ற பாதையில் தமிழகத்தை நடத்திச் செல்லும் எடப்பாடியார்.. குவியும் பாராட்டுக்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

முன்னேற்ற பாதையில் தமிழகத்தை நடத்திச் செல்லும் எடப்பாடியார்.. குவியும் பாராட்டுக்கள்!

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. கொரோனா தாக்கத்தின் காரணமாக பல மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்தது.

இவ்வாறு இருக்க தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் எடப்பாடியார் தொழிற்சாலைகளுடனான புத்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பித்துள்ளார்.

இவ்வாறு செய்ததன் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நமது முதல்வர்.

இந்த வகையில் மொத்தம் தீட்டப்பட்டுள்ள நலத்திட்டங்களில் முதல்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற 9 மாவட்டங்களில் இந்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் புதுப்பித்த கலப்பு மின்சாரம் தயாரிப்பு, காற்றாலை மின்சார திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து மேலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உலோகங்களை சுத்திகரிக்கும் திட்டம், டேட்டா சென்டர் அமைக்கும் திட்டம், கார்பன் பைபர் தகடுகளை தயாரிக்கும் திட்டம், மின் குப்பைகளை அகற்றுவதற்கு மின் கழிவு மேலாண்மை திட்டம், காற்றாலைகள் தயாரிக்கும் திட்டம், டயர்கள் தயாரிக்கும் திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்டங்களை நிறுவனங்களுடன் புதுப்பித்து உள்ளது தமிழக அரசு.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் அமெரிக்கா, ஸ்பெயின், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா என பல நாடுகள் சார்பில் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு தமிழகத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் கொண்டு தனது ஆட்சியை நல்லாட்சியாக நடத்தி வருகிறார் எடப்பாடியார்.

Edapadi-Modiமேலும் இவ்வளவு வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் குவிந்தததை எண்ணி தமிழக இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top