Tamil Nadu | தமிழ் நாடு
எதிர்க்கட்சியினருக்கு நெத்தியடி பதில் அளித்த எடப்பாடியார்… கருத்தா பேசி கணக்க முடிச்ச முதல்வர்!
தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் தமிழகத்தில் பல்வேறு துறைகளை முன்னேற்றி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது மாநிலத்தை மாற்றி காட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று கொரோனா வைரஸ் நிலைப்பாடு பற்றி ஆய்வு செய்யவும், வெவ்வேறான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்வர் எடப்பாடியார் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடியார் மு க ஸ்டாலினை தனது கேள்விகளால் திகைத்துப் போக வைத்துள்ளார். அந்தச் செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது செய்தியாளர்கள் முதல்வரிடம், ‘ஸ்டாலின் உங்களை பொய்யான விவசாயி என்று கூறியதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு எடப்பாடியார், ‘அவருடைய (ஸ்டாலின்) தொழில் என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய எடப்பாடியார், ‘விவசாயம் தான் என்னுடைய முதல் தொழில். நான் குழந்தை பருவத்தில் இருந்தே விவசாயியாக வளர்ந்தவன். என்னுடைய கடின உழைப்பு பற்றி என்னுடைய பகுதியில் வசித்தவர்களுக்கு நன்றாக தெரியும். நான் ஒரு விவசாயி தான் என்று திமுக தலைவரான ஸ்டாலினுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் எடப்பாடியார், ‘ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? என்றும், விவசாயத்தை பற்றி அறியாத அவருக்கு எப்படி பொய்யான விவசாயி யார் என்று தெரியும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மட்டும் தான் தூத்துக்குடி சம்பவத்திற்கு 100%காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடியார்.
இறுதியாக எடப்பாடியார் கனிமொழியை பற்றி, ‘கனிமொழிக்கு எதுவும் தெரியாது. அவர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மக்களுக்கு தெரியும் நாங்கள் என்ன செய்கிறோம் என்று’ என காட்டமாக பேசியுள்ளார்.
எனவே, இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை எடப்பாடியார் எடுத்து வைத்ததை பார்த்த திமுகவினர் ஆடிப் போயுள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
