Connect with us

Cinemapettai

மக்கள் மனதை கவர்ந்த எடப்பாடியார்.. பொங்கலுக்கு அடித்த ஜாக்பாட்!

edappadi palanisamy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மக்கள் மனதை கவர்ந்த எடப்பாடியார்.. பொங்கலுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ்நாட்டில் தற்போது அதிமுக கட்சி தனது ஆட்சியை நடத்தி வருகிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆட்சி தொடர்ந்து  மக்களுக்காக செயல்பட்டு வந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மாவின் உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் யாரும் எதிர்பார்க்காமல் திடீரென மரணமடைந்தார்.

அதன்பிறகு கட்சியில் முதலமைச்சர் பதவிக்காக பலரும் போராடி வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ஷ்டவசமாக முதலமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பிறகு கட்சியிலும் சரி, மக்களிடத்திலும் சரி பல சந்தேகங்கள் எழத் தொடங்கின.

எவ்வாறு ஆட்சியை சிறப்பாக நடத்த போகிறார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதலமைச்சர் பணியை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் பல கட்சிகள்  ஈடுபட்டு வருகின்றன. ஆனால் எடப்பாடி எப்போதுமே அவரது தொகுதியான நங்கவள்ளி பகுதியிலுள்ள பெரிய சோரகை சென்றாயா கோவிலில் இருந்து தான் பிரச்சாரத்தை  தொடங்குவாரம்.

இவர் கட்சியில் சேர்ந்ததிலிருந்தே தேர்தல் வந்தால் இந்த கோயிலில் இருந்து தான் முதலில் பிரச்சாரத்தை ஆரம்பிப்பாராம்.  2011ம் ஆண்டு  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கூட இந்த கோயில் இருந்துதான் பிரச்சாரத்தை ஆரம்பித்து வெற்றி பெற்றார்.

edappadi palanisamy

edappadi palanisamy

 

அதுமட்டுமில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொங்கலுக்கு தலா குடும்பத்திற்கு 2500ரூபாய் தர உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதலமைச்சர் பதவி கிடைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பெரிய சோரகை சென்றாயா கோவிலில் உள்ள கடவுள் தான் காரணம் என கூறியுள்ளார். அதனால் தற்போது நடக்க உள்ள தேர்தலுக்காக முதலில் இந்த கடவுளை வணங்கிவிட்டு பிரச்சாரத்தை நடத்த உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ மக்களுக்கு நல்ல செய்தால் போதும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top