ஈஷா யோகா மையம் சார்பாக கோவை வெள்ளயங்கிரியில் பிரமாண்ட சிவன் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். பின்னர், அங்கு உரை நிகழ்த்தி விமான நிலையம் திரும்பிய பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார்.

விஐபிக்கள் ஓய்வறையில் நடந்த இந்த சந்திப்பில், அதிகாரிகளோ, உதவியாளர்களோ யாருமே இல்லை. இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து தனிவிமானத்தில் மோடி புறப்பட்டுச் சென்றார். அவரை முதல்வர் வழியனுப்பி வைத்தார்.

இந்த ரகசிய சந்திப்பு தமிழக அரசியல் நிலவரம், அடுத்தகட்ட திட்டம் குறித்து பேசப்பட்டதா? இல்லை ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி பேசினார்களா என பொதுமக்களிடையே தற்போது கேள்வியை எழுப்பியுள்ளது.

நேற்று பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்னரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.