Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகத்தை செதுக்கும் சிற்பியாக, ஆட்சியை பிடிப்பது யார்.? அடுத்த முதல்வரும் இவர்தான்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் காட்டிய நல்லாட்சியை பின்பற்றி, அதிமுகவை ஒரு நிலையான கட்சியாக வலுப்படுத்தி வருகிறார் எடப்பாடியார்.
தமிழ் மக்களின் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆதரவும் வரவேற்பும் நம்பிக்கையும் கிடைத்துள்ளது.
இதற்குக் காரணம் என்னவென்றால் மக்கள், கட்சி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலதரப்பட்டவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்துக் கொடுப்பவராக முதல்வர் எடப்பாடியார் விளங்குவது மட்டுமல்லாமல் பல புதிய திட்டங்களால் தமிழகத்தைப் பட்டை தீட்டியுள்ளார் எடப்பாடியார்.
தமிழகம் பொருளாதார ரீதியிலும், கொரோனாவால் குணமடைந்தவர் விகிதத்திலும் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து கொண்டு போகும் குணமும், பொறுமையும் இபிஎஸ் இடம் அதிகமாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்களின் மத்தியிலும் அதிமுக கட்சி நிர்வாகிகளின் மத்தியிலும் எடப்பாடியாருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

Edappadi Palaniswami
செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ‘இபிஎஸ் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்’ என்பது மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக தொண்டர்கள் என பலரின் ஒருமித்த குரலாக இருந்தது.
இதனால் சந்தேகத்திற்கு இடமின்றி எடப்பாடியாரின் ஆட்சியே மீண்டும் அமையும் என்கிறது அதிமுக வட்டாரம்.
