Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகத்தில் காலரா நோயை ஒழித்து சாதனை புரிந்த எடப்பாடியார்! குவியும் பாராட்டுக்கள்!
தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் பொருளாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, மருத்துவம் போன்ற பல துறைகளில் முன்னேற்றி தமிழகத்தை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாற்றி சாதனை புரிந்துள்ளார் எடப்பாடியார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது கழிவுநீர் மேலாண்மை திட்டத்தினால் காலரா நோய்க்கு முற்றுப்புள்ளியை வைத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது எடப்பாடி அரசு.
அதாவது தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து காலராவால் ஒருவர்கூட இறக்கவில்லை. இதைப்பற்றிய புள்ளி விவரங்கள் தமிழக சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த புள்ளிவிவரத்தில் சிறப்பான கழிவு நீர் பராமரிப்பு, பாதாளசாக்கடை திட்டங்கள் போன்ற சீரான திட்டங்களால் காலராவை முற்றிலுமாக ஒழித்து உள்ளது தமிழக அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக அரசு பொறுப்பேற்ற 2012 ஆம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை 8 வருடங்களில் மொத்தம் 810 பேர் மட்டுமே (ஆண்டொன்றிற்கு சராசரியாக 89 பேர்) காலராவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2017இல் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் இதுவரை காலராவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ஒருவர் கூட இல்லை என்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் திமுக ஆட்சிக் காலமான 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை காலரா நோயால் 3144 பேர் (சராசரியாக ஆண்டுக்கு 709 பேர்) பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு எடப்பாடியாரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கொடிய காலரா நோய் ஒழிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பல தரப்பினரும் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
