Connect with us
Cinemapettai

Cinemapettai

edapaddi-palanisami-admk-1

Tamil Nadu | தமிழ் நாடு

ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றிய எடப்பாடியார்.. 7.5% உள் ஒதுக்கீடுடன் கூடிய மருத்துவ படிப்புக்கான ரேங்கிங் லிஸ்ட்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பாக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர் தமிழகத்தை பல திட்டங்களை பட்டை தீட்டி இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

அதாவது எடப்பாடியார், தமிழகத்துக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்பதை அறிந்து முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,  நீர் மேலாண்மையை சிறப்பிப்பது, விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது  போன்ற  திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது  தமிழக முதல்வர் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை அறிவித்து, 7.5 சதவீத உள் ஒதுக்கீடுடன் கூடிய மருத்துவ படிப்புக்கான ரேங்க் லிஸ்டை வெளியிட்டுள்ளார்.

அதாவது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.  அதுமட்டுமல்லாமல் ஏழை மாணவ மாணவர்களின் மருத்துவ படிப்புக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதலே அமல்படுத்தி, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த வருடத்திற்கான ரேங்கிங் லிஸ்ட் வெளியிட்டுள்ளார் தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.

இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4061 இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாம்.

மேலும் 951 விண்ணப்பங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஏற்கப்பட்ட இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவு நனவாக வழி செய்துள்ளார்  தமிழக முதல்வர்.

எனவே, இவ்வாறு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கி, பல மருத்துவர்களை உருவாக்க எண்ணி மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடியாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

edappadi-palaniswami-1

edappadi-palaniswami-1

Continue Reading
To Top