ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய அறையைப் பயன்படுத்தவில்லை. தனி அறையில் அமர்ந்துதான் தனது பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது முதல்வராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகம் வந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய அறையை பயன்படுத்துவாரா? மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

ஏனெனில், ஜெ., மறைவிற்கு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், ஜெ.,வின் தீவிர விசுவாசி, அதனால் ஜெயலலிதா பயன்படுத்திய அறையை பயன்படுத்தாமல், வேறு ஒரு அறையில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டார்.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஜெயலலிதா பயன்படுத்திய அறையில், அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி செயல் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.