Politics | அரசியல்
ரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்
சமீபகாலமாக தளபதி விஜய் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களின் பாதுகாப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் கடந்த சில படங்களின் வசனங்கள் நேரடியாகவே ஆளுங்கட்சியை தாக்கும் வகையில் அமைந்தது. சர்க்கார் என்ற படத்தில் ஆளுங்கட்சியை லெப்ட் ரைட் வாங்கியிருப்பார்.
என்னதான் ஆளுங்கட்சி தவறு செய்தாலும் அதை விமர்சிக்கும் உரிமை சக மனிதனுக்கு கிடையாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஆளுங்கட்சியினர் நடந்து கொள்கின்றனர். சர்க்கார் பட ரிலீஸின்போது பேனர் கிழித்தது, ரசிகர்களை தாக்கியது என சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீபத்தில் நடந்த பிகில் பட ஆடியோ வெளியீட்டில் கூட அவர் நேரடியாக ஆளுங்கட்சி எதிர்க்கவில்லை. தனது ரசிகர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கினார். ஆனால் அதையும் அரசியலாக்கி அதில் குளிர்காய்கின்றனர் மீடியாக்கள்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல தொடர்ந்து அவர் பேசும் அனைத்தையும் அரசியலுடன் ஒப்பிடுவதால் தளபதி விஜய்யின் பட வெளியீட்டின்போது பல பிரச்சனைகளை தயாரிப்பு நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க நினைத்த விஜய்யை, உங்களை சந்திக்க நேரமில்லை என கூறி மறுத்து விட்டனர். அப்படி சந்திக்க வேண்டுமானால் விமர்சித்த அனைத்து அமைச்சர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்துள்ளனர்.
ஒரு மனுஷன் நல்லதை பேசி விடக்கூடாது.. என்ன உலகமடா இது..
