அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.

தற்போது, கூவத்தூர் ‘கோல்டன் பே’ ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.