Reviews | விமர்சனங்கள்
எச்சரிக்கை படத்தின் திரை விமர்சனம்.!
லட்சுமி மற்றும் மா ஆகிய பாலியல் சம்மந்தபட்ட குறும்படத்தை இயக்கியவர் இயக்குனர் சர்ஜீன் தற்பொழுது இவர் இயக்கத்தில் எச்சரிக்கை படம் வெளியாகியுள்ளது, பாலியல் படத்தை இயக்கிய இவர் இந்த படத்தில் என்ன சொல்லவருகிறார் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

Echarikkai-Idhu-Manithargal-Nadamadum-Idam-Movie-Review
கிஷோர் மற்றும் விவேக் ராஜ கோபால் தான் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் கிஷோர் விவேக் ராஜ கோபாலின் மாமா இவர்கள் இருவரும் 20 வருடம் கழித்து சந்திக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் மிக முக்கியமாக தேவைபடுவது பணம் தான், அதை எப்படி சம்பாதிப்பது என தீவிர ஆலோசனை செய்கிறார்கள்,
ஒருவழியாக கடத்தில் தொழில் செய்யலாம் என முடிவு செய்கிறார்கள் அதனால் கடத்தல் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்கள் பணத்திற்காக தனது காதலியை கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார் விவேக் இது கிஷோருக்கு தெரியாது, இவரின் காதலி தான் வரலக்ஷ்மி ஒரு வழியாக கடத்துகிறார்கள்,
வரலக்ஷ்மியின் அப்பா தனது பெண்ணை காப்பாற்ற போலிஷ் கமிஷரான சத்தியராஜை நாடுகிறார், சத்யராஜ் மகளுக்கு ஜோடிய நோய் இருப்பதால் சத்தியராஜ்க்கும் பணம் தேவைபடுகிறது இவர்களுக்கு பணம் தேவைபடுவது எப்படி பணம் கிடைகிறது என்பதை அழகாக கூறியுள்ளார் இயக்குனர்.
படம் ஆரம்பித்ததும் எதார்த்தமாக செல்கிறது அதன் பிறகு படத்தில் எந்த சுவாரசியமும் இல்லை காமெடியாக யோகிபாபு நடித்துள்ளார் ஆனால் அவரை சரியாக படத்தில் யூஸ் பண்ணவில்லை என்றே சொல்லவேண்டும் முதல் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும் இரண்டாவது பாதி படம் சூப்பராக செல்கிறது இந்த நிலையில் கடைசி 30 நிமிடம் செம ட்விஸ்ட் நிறைய சுவாரசியம் இருக்கிறது.
மேலும் படத்தில் காதல் உறவின் முக்கியத்துவம் அனைத்தையும் மக்களுக்கு அருமையாக புரியவைதுள்ளர் இயக்குனர் குறிப்பாக சத்யராஜ் தன்னுடைய மகளுக்காக பணத்தை எரித்து காப்பாற்றுவது செம எமோஷ்னலாக இருந்தது. இப்படி படத்தில் நல்ல விஷயம் இருந்தாலும் படத்தின் நீளம் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
படம் நம்மளை சோதித்தாலும் கடைசி 30 நிமிடம் அனைவரையும் ஊர்ந்து கவனிக்க வைக்கிறது.
எச்சரிக்கை : 2.75 / 5
