Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காதலித்ததை பற்றி பாக்கியா எழிலிடம் சொல்லி பீல் பண்ணுகிறார். இனியாவுக்காக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சப்போர்ட் பண்ணினார்கள். இனியாவுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தோம், ஒவ்வொருவரும் அவளுடைய வாழ்க்கையை யோசித்து தானே அவளை படித்து முன்னேறுவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறோம்.
ஆனால் அவள் அதை எதையும் கண்டு கொள்ளாமல் இப்படி பண்ணினால் நான் என்ன பண்ணுவது. நான் பட்ட கஷ்டம் அவள் படக்கூடாது என்பதற்காக தான் படிப்பின் முக்கியத்துவதையும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதையும் சொல்லி சொல்லி வளர்த்தேன். உங்களை வளர்க்கும் பொழுது கூட நான் அந்த அளவுக்கு கஷ்டப்படவில்லை. ஆனால் இந்த இனியா எதையும் புரிந்து கொள்ளாமல் இப்படி இருக்கிறாளே என்று எழிலிடம் சொல்லி புலம்புகிறார்.
அத்துடன் எனக்கு இனிய காதலித்ததும் பிரச்சனை இல்லை, ஆகாஷை காதலித்ததும் பிரச்சனை இல்லை, ஆனால் இந்த வயதில் காதல் தேவையா? அவனும் படித்து கலெக்டர் ஆகி தான் அவனுடைய குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று செல்வி ஆசைப்படுகிறார். ஆனால் இனியா என்னிடம் சொல்லியது என்னவென்றால் ஆகாஷ் வேண்டாம் என்று தான் என்னிடம் சொன்னான்.
ஆனால் நான் தான் ஆகாஷை பிடிவாதமாக பேச வைத்து காதலிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா என்று பாக்கியா பீல் பண்ணுகிறார். அந்த வகையில் இந்த காதல் விவாகரத்தில் முழுக்க முழுக்க இனியா செய்த குளறுபடியால் செல்வி குடும்பம் தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக செழியன், இனியாவை பார்த்து யாரை பார்த்தாலும் பல்லை இழுத்து பேச ஆரம்பித்து விடுவியா?
ஒருத்தரையும் விடமாட்டியா என்று கொஞ்சம் மட்டமான வார்த்தைகளால் இனியவை காயப்படுத்தி விட்டார். இதைக் கேட்ட பாக்கியா கோபப்பட்டு செழியனை கண்டித்து உனக்கு இனியவை கண்டிக்க எந்த உரிமையும் இல்லை. அவளைப் பெற்ற நானும் உங்க அப்பாவும் இருக்கிறோம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று திட்டி உள்ளே அனுப்பி விடுகிறார்.
ஆனாலும் செழியன் பேசியது தவறு என்பதால் பாக்கியா, இனியாவிடம் பேசுகிறார். இனியா செய்த தவறையும் புரிய வைப்பதற்கு முயற்சி எடுக்கிறார். உடனே இனியாவும் இனி என்னால் உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்தவித கஷ்டமும் வராது. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி நான் படித்து ஜெயிக்கிறேன் என்று சத்தியம் பண்ணுகிறார். அடுத்ததாக பாக்கியா வழக்கம்போல் ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகிறார்.
ஆனால் ஈஸ்வரி, பாக்யாவை நீ எங்கேயும் போக வேண்டாம் குடும்பத்தையும் பிள்ளைகளையும் ஒழுங்க பார்த்து வீட்டில் வேலையை பார்த்து இரு என்று சொல்கிறார். அந்த வகையில் பழைய மாதிரி பாக்யாவை அடுப்பாங்கறையிலேயே முடங்கி இருப்பதற்கு ஈஸ்வரி வழிவகுகிறார். இருந்தாலும் பாக்கியா, ஈஸ்வரி பேச்சைக் கேட்காமல் ரெஸ்டாரண்டுக்கு போய் வேலை பார்ப்பார். இதில் சைடு கேப்பில் கோபி நுழைந்து பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக ஈஸ்வரிடம் பேசுகிறார்.