Connect with us

Cinemapettai

அந்த மூத்த நடிகரின் தோல்வி படம்.. ஆனால் அதில் நடித்த 47 வயது நடிகைக்கு கொட்டும் பட வாய்ப்புகள்

kasturi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த மூத்த நடிகரின் தோல்வி படம்.. ஆனால் அதில் நடித்த 47 வயது நடிகைக்கு கொட்டும் பட வாய்ப்புகள்

தமிழ் சினிமாவில் நேரம் நன்றாக இருந்தால் தோல்வி படத்தில் நடித்திருந்தாலும் சில சமயம் அவர்களது கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு படவாய்ப்புகள் குவியும்.

அப்படித்தான் 47 வயது நடிகைக்கு படவாய்ப்புகள் தென்னிந்திய சினிமாவில் இருந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தளபதி விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்.

அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு பெரிதாக தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் சன் டிவியில் கஸ்தூரி எனும் நாடகத்தில் நடித்தார்.

அந்த நாடகம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்றும் நிறைய பேருக்கு கஸ்தூரி என்று தான் இவரை அடையாளம் தெரியும். ஈஸ்வரி ராவ் என்றால் தெரியாது.

நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதாபாத்திரத்திற்கு காத்துக்கொண்டிருந்த ஈஸ்வரி ராவ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ஈஸ்வரி ராவ் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகையாக மாறி விட்டாராம். இத்தனைக்கும் அவருக்கு வயது 47.

காலா படம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் தோல்வியை சந்தித்தாலும் அந்தப் படத்தின் மூலம் ஈஸ்வரி ராவ் மிகப் பெரிய புகழை அடைந்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top