வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பழைய காதலை நினைத்து மறைமுகமாக கண்ணீர் வடிக்கும் ஈஸ்வரி.. குணசேகரனின் உயிரை எடுக்க வந்த வளவன்

Ethirneechal Serial: தற்போது சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனைவரும் ஆவலாக ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தான். இந்த நாடகத்தை பார்த்த பின்பு தான் எங்களுக்கு தூக்கமே வரும் என்று ஒவ்வொரு எபிசோடையும் மிஸ் பண்ணாமல் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் குணசேகரனின் கொட்டத்தை அடக்கும் முறையில் அந்த வீட்டில் உள்ள பெண்கள் துணிந்து விட்டார்கள். இவர்களுக்கு உறுதுணையாக அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் இருக்கிறார்கள். இதனால் குணசேகரனின் சொத்து விஷயத்தை வைத்து ஆட்டிப்படைத்து விட்டார் அப்பத்தா மற்றும் ஜீவானந்தம்.

Also read: பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

இந்த காரணத்திற்காக கொலை வெறியுடன் திரிந்து கொண்டிருந்த குணசேகரன், வளவன் என்கிற முரட்டு வில்லனை வைத்து அவரை காலி பண்ண முடிவெடுத்தார். ஆனால் அந்த முயற்சியில் பரிதாபமாக ஜீவானந்தத்தின் மனைவி உயிர் போய்விட்டது. இதை தெரிந்த குணசேகரின் மனைவி ஈஸ்வரி மற்றும் கதிரின் மனைவி நந்தினி தற்போது வரை குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போது ஜீவானந்தத்தை சந்திக்க போகும் குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் போகும்போது அவரின் நிலைமையை கண்டு வருத்தத்துடன் பேசிட்டு போகிறார்கள். அப்போது ஜனனி ஜீவானந்தத்தின் முன்னாடி இறக்கத்துடன் பாவம் போல் பேச வேண்டாம். அதை அவர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நினைக்கிறார். அதை நாம் ஞாபகப்படுத்தும் மாதிரி எதையும் பேசிக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

Also read: 40% சொத்துக்காக குரங்கு போல் குட்டிக்கரணம் போடும் குணசேகரன்.. சீக்ரெட் ஆக ப்ளான் பண்ணும் ஜனனி

உடனே அவருடைய நிலைமையை நினைத்து ஈஸ்வரி யாருக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்கிறார். அத்துடன் பழைய காதலை நினைத்து அவ்வப்போது வருந்துகிறார். மேலும் ஜீவானந்தத்தின் மகளை பார்க்கும் பொறுப்பை ஜனனி, ஈஸ்வரிடம் ஒப்படைப்பதற்கு முயற்சி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்தபடியாக குணசேகரன் ஏற்பாடு செய்த வளவனுக்கு தேவையான காசு இன்னும் கொடுக்காததால் நேரடியாக இவருடைய வீட்டிற்கு வந்து விடுகிறார். வந்து குணசேகரன் மற்றும் கதிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வில்லனிடம் வழக்கம் போல் கதிர் ஓவர் ஆட்டம் போட்டு துள்ளிக் கொண்டு வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்கும் விதமாக கடைசியில் குணசேகரனின் உயிரை எடுக்கும் எமனாக இந்த வில்லன் மாறப் போகிறார்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

- Advertisement -

Trending News